Friday, December 24, 2010

தென் மேற்கு பருவக் காற்று -ஒரு பார்வை



கூடல் நகர் இயக்குனர் சீனு ராமசாமியின் இரண்டாவது படைப்பு தான் இந்த தென் மேற்கு பருவக் காற்று

முதல் மரியாதை, கடலோர கவிதைகள், கிழக்கு சீமையிலே போன்ற படங்களின் வரிசையில் வாழ்க்கையின் உண்மையான மனிதர்களை கதையின் நாயகர்களாக காட்டியிருக்கும் தென் மேற்கு பருவக் காற்று கள்ளிகாட்டு கடைகோடி மனிதர்களின் வாழ்வியலை மிக அற்புதமாக பதிவு செய்திருக்கிறது,

கள்ளிக்காட்டில் மண்ணையும், மகனையும் உயிராக நினைக்கும் தாய் சரண்யா,அவங்களோட மகன் முருகன் (கதைநாயகன்) மிகைபடுத்தாதா ஒரு கிராமத்து இளைஞன்,ஆடு மேய்க்கிறது, அம்மாவுக்கு உதவுவது, எப்போதாவது குடித்துவிட்டு அம்மாவிடம் திட்டு வாங்குவது என்று இருக்கிறான்,அப்பா இல்லாத தான் மகனுக்கு தன் தம்பி பொண்ணையே ஆறு மாதத்திற்கு பிறகு திருமணம் செய்வதாக பேசி முடிக்கிறாங்க சரண்யா,அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத முருகன் ஆறு மாதத்திற்குள் அம்மாவின் மனதை மாற்றலாம் என்று நினைக்கிறான்,
வழக்கமாக பட்டியில் வந்து ஆடுகளை திருடிக் கொண்டு போகும் கூட்டம் வர,அவர்களில் ஒருவனை பிடிக்கும் முருகன் அது ஒரு பெண் (கதைநாயகி பேச்சி ) என்று தெரிந்து செய்வது அறியாது நிற்க அவள் தப்பித்து செல்கிறாள்,


பேச்சியின் அண்ணன்கள் இருவரும் ஆடுகளை வெட்டி விற்கிறார்கள் இது அவர்களின் தொழிலாகவே இருக்கிறது, ஆடு திருடியவர்களை கண்டுப்பிடிக்க போலீஸ் வருகிறது, ஆடு திருடும் போது நான் பார்த்து ஒரு பையன் என்று பேச்சியை பார்க்க போலீஸ் உடன் போகிறான் முருகன், போலீஸ் திருடனை தேட இவன் பேச்சியை தேடுகிறான் போலீஸ் முடியாமல் போக,ஒரு இடத்தில் பேச்சியை பார்க்கும் முருகன் தன் ஆட்டை திருட வந்தது பேச்சியும் அவளின் அண்ணன்களும் என்று தெரிந்து கொள்கிறான் ,அவள் மீது உள்ள காதலால் எதுவும் செய்யாமல் இருக்க,
முருகனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்று அறிந்த பேச்சியின் அண்ணன் முருகனை வந்தது அடிக்க, போலீஸ் பிரச்சனையாக மாறிவிடுகிறது,பேச்சி அண்ணனிடம் சொல்லிவிட்டால் என்று நினைத்து முருகன் உண்மையை சொல்ல, பேச்சியின் அண்ணன்கள் ஜெயிலுக்கு போகிறார்கள்,


முருகன் ஊருக்கே என் சி சி மாணவிகளுக்கு சமைத்து போட வரும் பேச்சியும், முருகனும் காதலிக்கிறாக்கள், அம்மாவுக்கு உண்மை தெரிந்து, பேச்சி வீட்டுக்கே சென்று மிரட்டி வருகிறாள்,
பேச்சி உங்க அம்மா ஒத்துக்க மாட்டங்க என்று நடந்ததை சொல்கிறாள் முருகன் யார் எதுத்தாலும் நீ தான் மனைவி என்று சமாதனப்படுத்தி அனுப்புகிறான்,
கல்யாணத்தை நிறுத்த போன இடத்தில மாமாவின் பெண் தன்னை விரும்புகிறாள் என்றும் அவள் ரோம்ப நல்ல பெண் என்று தெரிந்து வருந்துகிறான், மாமாவிடம் சென்று பேச, அவர் மனம் உடைந்து சாபம் விட்டு போகிறார்,
சரண்யாவுக்கு தன் கணவன் அந்த பேச்சி ஊரை சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டதை நினைத்து பார்த்து மகனுக்கு சம்மதம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்,
இந்த நிலையில் ஜெயிலில் இருந்து அண்ணன்கள் வந்து விட, அவர்களுக்கு தெரியாமல் தேனிக்கு சென்று மணமுடிக்க திட்டமிடுகிறார்கள், பேச்சி வரவேயில்லை, வீட்டுக்கு வரும் போது அம்மா மருத்துவமனையில் இருக்கும் சேதி கேட்டு போகிறான்,
சரண்யாவுக்கு என்ன ஆனது,முருகன் பேச்சி காதல் ஜெயித்தா... ?
என்று வெண்திரையில் பார்த்து கொள்ளுங்கள்,
கதையில் மூன்று சீன் மட்டுமே வரும் முறைப்பெண் கதாப்பாத்திரத்தின் தேர்வும் வசனங்களும் மிக அருமை...புதுமுக இசை அமைப்பாளர் சிறப்பாக செய்திருக்கிறார்,அவர் கண்டிப்பாக ரகுமான் சாயலை தவிர்க்க வேண்டும்,
கதைக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் செழியன் கள்ளிப் பூ செண்டு,
இயக்குனர் தெளிவான திரைக்கதையுடன் வாழ்க்கையின் கடைகோடி மனிதர்களை நாயகர்களாக, அம்மா (சரண்யா), சரண்யா மகன் (முருகன்),கதைநாயகி (பேச்சி),முறைப்பெண்,முருகனின் நண்பன்,என்று எல்லோரையும் அழுத்தமாக மனதில் பதிய வைத்திருக்கிறார், இது ஒரு தமிழர்களின் வாழ்வியல் பதிவு.