Saturday, November 5, 2011

2011 எதிர்ப்பார்க்கும் தமிழ் படங்கள்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு வரும் மயக்கம் என்ன நவம்பர் இறுதிக்குள் வெளிவரும் என்று தெரிகிறது, ஜி.வி பிரகாஷ் இசையில் பாடல்கள், காதல் என் காதல், ஓட ஓட வாழ்க்கை ஓடுது, இரண்டு பாடல்களும் பெரிய ஹிட் ஆகி இளைஞர்கள் இடையில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது, இதில் தனுஷ் ஒரு போட்டோ கிராப்பர் வேடத்தில் நடிக்கிறார்.


முதல் முறையாக சிம்பு போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் , பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் தரணி குருவிக்கு பிறகு இயக்கம் படம், இந்தியில்  வெற்றி பெற்ற DABANGG படத்தின் ரீமேக் என்பதாலும் பெரிதும்
எதிர்பார்க்கப்படுகிறது.



சுப்ரமணியபுரம் சசிகுமார் தயாரிப்பில், நடிப்பில், வரவிருக்கும் போராளி படத்தின் இயக்குனர் சமுத்தரகனி,  இவர் ஏற்கனவே நாடோடிகள் வெற்றி படத்தை இயக்கியவர், இது ஒரு வெற்றி கூட்டணி என்பதால் எதிர்ப்பார்ப்பு உண்டாக்கி உள்ளது.


சன் டி.வி வெளியிடாக வரும், ராஜபாட்டை, 


UTV வெளியிடாக வரும் வேட்டை இரண்டும் டிசம்பர் வரும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.


Friday, November 4, 2011

உலக நாடுகளில் பெட்ரோல்

விலைவாசி உயர்வு முக்கியமாக எரிபொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு அமைகிறது, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டை மேலும் பலவினமாக்கும் இந்த விலை ஏற்றம்,  இந்தநிலையில் மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

நாடுகள்   

  • சவூதி -  8.53
  • குவைத் - 9.45                 
  • மலேசியா- 24.11
  • பாகிஸ்தான் 38.78
  • சீனா - 37.31
  • வியட்நாம்-  38.42
  • அமேரிக்கா - 39.64
  • இலங்கை -    44.51
  • நியூலாந்து -  57.36
  • ஆஸ்ரேலியா - 62.46
  • ஸ்பெயின் - 64.58
  • இத்தாலி - 75.34
  • சிங்கப்பூர் - 75.07
  • ஜப்பான் - 70.75
  • பிரான்ஸ் - 74.84
  • ஜெர்மெனி - 83.37 
  • இங்கிலாந்து - 85.02
  • சுவிஸ்லாந்து - 65.57
  • தாய்லாந்து - 67.52
  • துருக்கி - 101.07


Wednesday, November 2, 2011

டின் டின்











இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் புதிய படம் The Adventures of Tintin,  இந்த படத்தை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்யும் உரிமையை Gautham's Photon Kathas பெற்றுள்ளது. 
இந்த மாதத்தில் வெளிவரும் இந்த படம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். 


மேலும் விபரங்களுக்கு -http://www.letintinmovie.com/


அண்ணா நூற்றாண்டு நூலகம்

மாணவர்களுக்கும், சான்றோர்களுக்கும், பொது மக்களுக்கும், வெளி நாட்டவர்களுக்கும் பெரிதும் பயன்படும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ,
இந்த கட்டிடம் குழந்தைகள் காப்பகமாக மாற்றப்படும் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, சமச்சீர் கல்வியின் பிரச்சனையில் நாம் வாய் திறக்கவில்லை, கலைஞர் காப்பிட்டுத் திட்டம் மாற்றப்பட்ட போதும் நாம் வாய் திறக்கவில்லை, இப்போதும் எப்போதும் போலவே இருக்கத்தான் போகிறோம், எல்லாவற்றையும் கீழிருந்து மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ..

அண்ணா நுற்றாண்டு நூலகம் பற்றிய விபரங்களுக்கு http://annacentenarylibrary.blogspot.com/

Tuesday, November 1, 2011

தல வழி

                                                 
இது வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், விஜய்  இணைந்து நடிக்க,
ஞானவேல் ராஜா ( ஸ்டுடியோ ஸ்க்ரீன் ) தயாரிக்கும் படத்தின் பெயர் என்று சொல்லப்படுகிறது , அப்படி இருந்தால் இது தமிழ் சினிமாவுக்கு புது வழி என்றே சொல்லலாம்.இதில் சூர்யா, கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடிப்பார்களோ ...?

காதல்

வீணாய்
இருந்த
நான்
வீனையானது
விரல்களாய்
தோழி
நீ வந்ததால் ...

காதல்

பேசியது
உன்
மௌனம்
ஊமையானது
என்
வார்த்தை ...

நிலா

உனக்கு
மட்டும்
இரவிலும்
நிழல்
நிலா ...

மழை

உன்
மீது
விழுந்ததில்
நனைந்தது
மழை ...