அஞ்சான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழ் திரைப்படம்,
காரணம் சூர்யா லிங்குசாமி இணைந்தது,
படத்தில் சூர்யா first look இன்னொரு காரணம் கெளதம் கதை பிடிக்க வில்லை என்று வந்து இந்த படத்தில் நடிக்கிறார் , அப்புறம் சூர்யா பாடியிருக்கிறார், சமந்தா, சந்தோஷ் சிவன், யுவன் என்று எதிபார்ப்பை எகிற வைக்கும் விஷியங்கள் அதிகம்,
படம் வெளிவந்த பிறகு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது,
கதை நண்பனை கொன்றவனை பழிவாங்குவது,
திரைக்கதை கிருஷனா தன் அண்ணன் ராஜ் பாயை தேடி மும்பை போகிறார், அப்போது அவருக்கு தெரிகிறது, அண்ணன் பெரிய டான் என்றும் அவரும் அவர் நண்பனும் எதிரிகளால் கொல்லப்பட்டு இருக்கிறாக்கள் என்று தெரியும் போது, அண்ணனால் பாதிக்கப்பட்ட குரூப் தம்பியை தாக்குகிறது, அப்போது தான் தெரிகிறது வந்திருப்பது கிருஷ்ணா அல்ல மும்பை டான் ராஜ் பாய் என்று இது இடைவேளை, பிறகு தன் நண்பனை கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதி திரைக்கதை.
வசனம் "நான் சாகனும்னாலும் நான் தான் முடிவு பண்ணனும், நீ சாகனும்னாலும் நான் தான் மமுடிவு பண்ணனும் "
"எதிரிகிட்ட கூட துரோகி இருக்க கூடாது ' நன்றாக இருக்கிறது,
இயக்கம் லிங்கு அவர்களின் டச் என்று இதில் எதையும் காண முடியவில்லை.பெரும் விறுவிறுப்பு இல்லாமல் முன்பே என்ன நடக்கும் அடுத்த அடுத்த சீன் என்ன எனபது உன்கூடியே கணிக்க முடிகிறது ,சூர்யா சமந்தாகாதல் காட்சிகள் எடுபடவில்லை,
சந்தோஷ் சிவன் சிறப்பாக செய்து இருக்கிறார் , யுவன் பெரிதாக இல்லை, சமந்தா கிளாமருக்கு உதவுகிறார் , சூர்யா வழக்கம் போல அவருடைய hardwork இந்த படத்திலும் வினாகிவிட்டது,



No comments:
Post a Comment